கொரோனா அச்ச நிலைமையை கருத்திற் கொண்டு, காரைதீவு பிரதேசபையின் இரண்டு பிரிவுகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காரைதீவு பிரதேச சபையின் நிதி மற்றும் நிர்வாக பிரிவுகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
காரைதீவு காரைதீவு பிரதேச சபை ஊழியர் ஒருரின் தந்தைக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, தவிசாளர் உள்ளிட்ட 65 ஊழியர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்ட் பரிசோதனையில், இருவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.