- Advertisement -
நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 7 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் மீதான வழக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அத்துடன், குறித்த சந்தேக நபர்கள் மீதான குற்றப் பத்திரிகை, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
90 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.