யுக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு, இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.
இரத்தினபுரி மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை இடைநிறுத்த வேண்டுமாயின், கொவிட் 19 குழு மற்றும் சுகாதார அதிகாரிகளே அது தொடர்பில் தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
அத்துடன், சுகாதார வழிகாட்டல்களை அடிப்படையாக கொண்டே, எதிர்வரும் 21 ஆம் திகதி விமான நிலையங்கள் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பில் சுற்றுலாத் துறையினரை தெளிவுபடுத்துவதற்காகவும், சுற்றுலாத் துறையினரை பதிவு செய்யும் நடவடிக்கையும் நாளைய தினம் கொழும்பில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், சுற்றுலாப் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுலா வழிநடத்துனர்கள், நாளைய தினம் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்