சர்வதேச விசாரணைக்காக மக்கள் வாக்குகளை பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிவந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குத்துடுவாய் பகுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜெனிவாவில் மீண்டும் காலநீடிப்பை பெற்றுக்கொள்ளவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முற்படுவதாகவும், அதனால் அவர்கள் இந்த விடயத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.