மெய்ப்பொருள் காண்பது அறிவு

நேற்று அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

- Advertisement -

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் சுமார் 50 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் 597 கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் 256 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், நாரஹென்பிட்டி பகுதியில் 79 பேரும், பொரளை பகுதியில் 60 பேரும், கிரேண்ட்பாஸ் பகுதியில் 26 பேரும், தெமட்டகொட பகுதியில் 19 பேரும், கொம்பனி தெரு பகுதியில் 12 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு கோட்டை, கொள்ளுபிட்டி, மட்டக்குளி, பத்தரமுல்லை, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை மற்றும் அவிசாவளை ஆகிய பிரதேசங்களிலும் தொற்றுக்குள்ளானவர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவாட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 366  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,  கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில்  இதுவரை 216 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 62 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கம்பஹா மாவட்டத்தில்  தொற்றுக்குள்ளானவர்களில் 48 பேர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் 36 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 34 பேரும், கண்டி மாவட்டத்தில் 33 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 20 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும், நுவரெலியா  மாவட்டத்தில் 6 பேரும், பதுளை மாவட்டத்தில் இரண்டு பேரும்  நேற்றைய தினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை 43 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 299 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து   இதுவரை 35 ஆயிரத்து 329  பேர்  குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 766  பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாடு முழுவதும் முப்படையினரால் நடாத்தப்படும்  77 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5 ஆயிரத்து  243 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக நாடு முழுவதும் 12 இலட்சத்து 5 ஆயிரத்து 417 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நெல் கொள்வனவின்போது ஆறு மாவட்டங்களுக்கு முன்னுரிமை

போட்டி விலையில் நெல் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மாதமொன்றுக்கு 2 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, எதிர்வரும்...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையினை ஒப்படைப்பதற்கு சபாநாயகர் உறுதி – ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை  முழுமையாக ஒப்படைப்பதற்கு  சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இணக்கம்...

விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

இலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் உள்ள பின்னணி – இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசி..!

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC செய்தி சேவையினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி...

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும், கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள...

Developed by: SEOGlitz