நாடாளாவிய ரீதியில் மதஅனுஷ்டானங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் வவுனியா முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் விசேட மதஅனுஷ்டானங்கள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் விசேட பூஜைவழிபாட்டு நிகழ்வுகளுடன் சுகாதார விதிமுறைகளுக்கமைய புத்தாண்டு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பூஜைவழிபாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை புதுவருடத்தில் அரச கடமைகளை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வுகள் பல்வேறு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகம் சம்மாந்துறை பிரதேச செயலகம் அம்பாறை மாவட்ட அரச திணைக்களங்கள், மற்றும் அரச நிறுவனங்கள் வவுனியா மாவட்ட செயலகம் ஆகியவற்றில் அரசபணியாளர்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைய இந்த நிகழ்வுகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.