மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பயணிக்கும் நபர்களுக்கு Rapid Antigen பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாகாணங்களுக்கு பயணிக்கும் நபர்களுக்கு Rapid Antigen பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
*****
கெப்பிட்டல் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்: https://t.me/capitalnewslk