மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் வைத்தியசாலைக்கு வருவதை கட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், கிளினிக் நோயாளர்கள் தபாலகங்கள் மற்றும் கிராமசேவகர் ஊடாக மருந்துகளை பெற்றுகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், இதுவரை 425 நோயாளர்கள் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் கணேசலிங்கம் கலாறஞ்சினி மேலும் குறிப்பிட்டுள்ளார்.