நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 21 ஆயிரம் கிலோகிராமுக்கும் மேற்பட்ட மஞ்சள் தொகை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 21 ஆயிரத்து தொள்ளாயிரம் கிலோகிராம் மஞ்சள், கடந்த 27 ஆம் திகதி ஹுங்கம கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து, குறித்த மஞ்சள் தொகை தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, அவை அம்பலாந்தோட்டை பகுதியில் நேற்று இரவு தீக்கிரையாக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற மஞ்சள் தொகைகளை தீக்கிரையாக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.