தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 28 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆயிரத்து 957 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.