மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சுமத்திய திலும் அமுனுகம!

- Advertisement -

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குற்றஞ்சாட்டியுள்ளார்.

கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளலர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

- Advertisement -

கொரோனா தொற்று உயிரிழப்புகளையும், முஸ்லிம் சமூகத்தினரின் எதிர்ப்பையும் முன்னிலைப்படுத்திக் கொண்டு அரசியல் செய்வதே எதிர்க்கட்சியினரின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான விடயங்களில் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கும் எதிர்க்கட்சியினரின் முயற்சி நகைச்சுவையான விடயமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை: துஷார இந்துனில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், கத்தோலிக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே,...

நாட்டிற்கு 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து ஆராய்ந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறித்த வாள்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்...

கொழும்பின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 9 மணியிலிருந்து இவ்வாறு 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டன

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடலங்களை அடக்கம்...

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை அண்மித்துள்ளது

நாட்டில் 338 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 948...

Developed by: SEOGlitz