மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையக கொத்தணியில் நிலவும் கொரோனா தொற்று குறித்த முழு விபரம் உள்ளே!

- Advertisement -

பொகவந்தலாவை பகுதியில் மேலும் 8 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையின் பணி புரியும்  இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடந்த 23 ஆம் திகதி  பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் குறித்த பி சி ஆர்  முடிவுகளின் பிரகாரம் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  பொகவந்தலாவை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசித்த 85 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அம்பகமுவ பிரதேச செயலக பிரிவின் ஊடாக நுவரெலியா மாவட்டத்திற்குள் உட்பிரவேசிக்கும் பிரதான வீதியான அட்டன் – கொழும்பு மார்க்கத்தின் கலுகல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக குறித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பசறை, காவத்தை மற்றும் டெமேரியா    பகுதியில் மேலும் இருவருக்கு நேற்றைய நாளில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இருவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணிய நபர்கள் மற்றும் கொழும்பில் இருந்து வருகை தந்த நபர்கள் ஆகியோர் உள்ளடங்கிய 34 பேருக்கு  PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

PCR பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் மேலும் இருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த புதிய வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு எதிராக செயற்படும் தன்மை காணப்படுவதாகவும் எச்சரிக்கை...

1000 ரூபா சம்பள விவகாரம் -ஆட்சேபனைகளை ஆராய கூடுகிறது சம்பள நிர்ணய சபை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூடவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என, சம்பள நிர்ணய சபையில்...

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் மனித உரிமை பேரவையில் இன்று

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது. இலங்கையில், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பிலான முறைசாரா ஆலோசனையாக இந்த தீர்மானம்...

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள  நிலையில்  அது தொடர்பில்  ஆராய்வதற்கு...

க.பொ.த. சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில்  இன்று ஆரம்பமாகவுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 2020 ஆம்...

Developed by: SEOGlitz