மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் நிலவும் கொரோனா தொற்று குறித்த முழு விபரம் உள்ளே!

- Advertisement -

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 410 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உடுவில் பகுதியை சேர்ந்த 5 பேருக்கும், சுன்னாகம், தெல்லிப்பழை மற்றும் கீரிமலை பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 5 பேருக்கும், கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த மார்ச் 8 ஆம் திகதி முதல் இது வரையிலான காலப்பகுதியில் வவுனியாவில் 10 ஆயிரத்து 844 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரையிலான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 727 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 239 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரையிலான காலப்பகுதியில் 554 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரையிலான காலப்பகுதியில் 380 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த புதிய வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு எதிராக செயற்படும் தன்மை காணப்படுவதாகவும் எச்சரிக்கை...

1000 ரூபா சம்பள விவகாரம் -ஆட்சேபனைகளை ஆராய கூடுகிறது சம்பள நிர்ணய சபை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூடவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என, சம்பள நிர்ணய சபையில்...

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் மனித உரிமை பேரவையில் இன்று

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது. இலங்கையில், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பிலான முறைசாரா ஆலோசனையாக இந்த தீர்மானம்...

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள  நிலையில்  அது தொடர்பில்  ஆராய்வதற்கு...

க.பொ.த. சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில்  இன்று ஆரம்பமாகவுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 2020 ஆம்...

Developed by: SEOGlitz