மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா எரிப்பு விவகாரம்: உரிய தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

- Advertisement -

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் மற்றும் கிரிஸ்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டுமென புத்தளம் நகர மேயர் கே. ஏ. பாயிஸ் தெரிவித்துள்ளார்.

புத்தளம் பகுதியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளதை போன்று, மதரீதியான உரிமைகளுக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து துரித தீர்மானம் ஒன்றினை பெற்றுத்தரவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யப்படவேண்டுமென தமது ஆகமத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், அதனைத் தாண்டி செயற்பட முடியாது எனவும் புத்தளம் நகர மேயர் கே. ஏ. பாயிஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்காது: கெஹெலிய!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நிராகரிக்க  இலங்கை எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு எதிரான குறித்த அறிக்கையை இந்தியா...

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்து குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றால், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 உயிரிழிப்புக்கள் பதிவு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த...

நாராங்கலை மலைக்கு சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கோரிக்கை!

பதுளை மாவட்டத்தின் சொர்னாத்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட நாராங்கலை மலைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குறித்த பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களினால் சூழலுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையில்...

COVAX திட்டத்தின் அடிப்படையில் 2 இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளது: சுதர்ஷினி அறிவிப்பு!

நாட்டுக்கு மேலும் 2 இலட்சத்து 64 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலமாக வழங்கப்படவுள்ள COVAX திட்டத்தின் அடிப்படையிலேயே குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக,...

Developed by: SEOGlitz