சிவனொளிபாத யாத்திரையில் ஈடுபடும் மக்கள் சுகாதார வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இம்முறை இவ்வாறு ஒரு அசாதாரண நிலைமை ஏற்படுமென யாரும் எதிர்பார்த்திருக்க வில்லை எனவும், அதனால் அனைவரும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், யாத்திரையில் ஈடுபடும் நபர்கள், சூழல் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்துமாறு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலித்தீன் மற்றும் குப்பைகளை உரிய முறையில் கையாழுதல் மற்றும், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளை தவிர்த்து செயற்படுமாறும் சுற்றுலாத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.