மெய்ப்பொருள் காண்பது அறிவு

பசறையில் மேலும் 34 பேர் தனிமைப்படுத்தலில்!

- Advertisement -

பசறை, காவத்தை மற்றும் டெமேரியா பகுதிகளில் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் வீ. இராஜதுரை தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் கடந்த 26ஆம் திகதி இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

- Advertisement -

இதனை அடுத்து, குறித்த இருவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணிய நபர்கள் மற்றும் கொழும்பில் இருந்து வருகை தந்த நபர்கள் ஆகியோர் உள்ளடங்கிய 34 பேருக்கு நேற்றைய தினம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், PCR பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை குறித்த 34 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பசறை – கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 16 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் வீ. இராஜதுரை தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது: காதர் மஸ்தான்!

ஐ. நா மனித உரிமை பேரவையில் ஆதரவு பெறுவதற்காக தற்போதைய அரசாங்கம் நாட்டின் தேசிய வளங்களை ஏனைய தரப்பினருக்கு விற்பனை செய்வதாக   எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளகூடிய விடயமல்ல அல்ல என...

தேசிய சொத்துக்கள் ஏனைய தரப்பினருக்கு ஒருபோதும் விற்பனை செய்யப்படமாட்டாது: ஐ.ம.ச உறுதி!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் தேசிய சொத்துக்கள் ஏனைய தரப்பினருக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியமைத்த தற்போதைய அரசாங்கம் இன்று அதனை மீறி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. திருகோணமலை பிரதேசத்தில்...

ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்காது: கெஹெலிய!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நிராகரிக்க  இலங்கை எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு எதிரான குறித்த அறிக்கையை இந்தியா...

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்து குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றால், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 உயிரிழிப்புக்கள் பதிவு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த...

Developed by: SEOGlitz