இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்தின் தலைவராக நுஷாட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
லக் சதொச மற்றும் CWE எனப்படும் கூட்டுறவு மொத்த விற்பனையகத்தின் முன்னாள் தலைவராக நுஷாட் பெரேரா கடமையாற்றியிருந்தார்.
வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், CWE எனப்படும் கூட்டுறவு மொத்த விற்பனையகத்தின் தலைவராக வெனுர குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், லக் சதொச நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.