பாடசாலைகளை மீளத் திறக்காது, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவிக்கின்றார்.

எதிர்க் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

பாடசாலைகள் திறக்கப்பட்டதாக அண்மையில் கல்வியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது. ஆனால் பலவந்தமாக பாடசாலைகளை திறப்பதின் ஊடாக மாணவர்கள் எதிர்நோக்கும் ஆபத்து எவ்வாறானது என்பது நாட்டுக்கு தெரிந்தது.பெரும்பாலான பாடசாலைகள், ஆரம்பிக்கப்பட்டு ஒரேநாளில் மீண்டும் மூடப்பட்டது.மாணவர்களின் வருகை வீதம் குறைவாகவுள்ளது. ஏனெனில் ஆபத்தான நிலைமை இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை.மாணவர்களை ஆபத்துகளுக்கு தள்ளுவதும் கூடாத விடயமாகும்.இந்த நிலையில் மாணவர்களை ஆபத்தான நிலைமைக்கு தள்ள வேண்டாம் என நாம் மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம்.சமூகத்துக்கு மத்தியில் உள்ள பயம் மற்றும் சந்தேகம் என்பன நிறைவடையும் வரை பாடசாலைகளை திறக்காது, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.இதனால் அரசாங்கத்திடம் உள்ள வளங்களை கல்விக்காக செலவழிப்பதற்கு உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.