மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட பணிப்புரை!

- Advertisement -

மதுபானம் மற்றும் எதனோல் உற்பத்திக்கு, சோளம் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, இதற்கான வர்த்தமானியை வெளியிடுமாறு, கலால் வரித் திணைக்களத்தின் ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை, மஞ்சள் மற்றும் சோளம் உள்ளிட்ட அறுவடைகளை, விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் போது இடம்பெறும் முறைகேடுகளை தடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அத்துடன், எதிர்வரக் கூடிய போகத்தில் மஞ்சள் மற்றும் சோளப் பயிர்ச் செய்கையாளர்ளுக்கு, நியாயமான விலையொன்றைப் பெற்றுக் கொடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற மஞ்சள் தொகைகளை அழிக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக, கடுமையான சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும்,  சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்காது: கெஹெலிய!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நிராகரிக்க  இலங்கை எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு எதிரான குறித்த அறிக்கையை இந்தியா...

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்து குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றால், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 உயிரிழிப்புக்கள் பதிவு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த...

நாராங்கலை மலைக்கு சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கோரிக்கை!

பதுளை மாவட்டத்தின் சொர்னாத்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட நாராங்கலை மலைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குறித்த பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களினால் சூழலுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையில்...

COVAX திட்டத்தின் அடிப்படையில் 2 இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளது: சுதர்ஷினி அறிவிப்பு!

நாட்டுக்கு மேலும் 2 இலட்சத்து 64 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலமாக வழங்கப்படவுள்ள COVAX திட்டத்தின் அடிப்படையிலேயே குறித்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக,...

Developed by: SEOGlitz