கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களை தகனம் செய்வதின் ஊடாக, தாம் அரசியல் இலாபங்களை எதிர்பார்ப்பதில்லை என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிக்கின்றார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மதத் தலைவர்களுக்காகவும், வேறு நாட்டு மக்களின் தேவைக்காகவும் உடல்களை புதைக்க முடியாது.இந்த நாட்டு மக்களின் நலன் கருதி சுகாதார தரப்பினரால் ஏதேனும் ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனில், அதுவே செல்லுபடியாகும்.அதுவே தேவையாகவும் உள்ளது.நாம் இதன் ஊடாக அரசியல் இலாபம் எதிர்பார்ப்பதில்லை.சுகாதார தரப்பின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் செயற்பட வேண்டும்