கால்நடைகளை பாதுகாப்பதற்கு இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் ராமநாதன் தெரிவிக்கின்றார்.
கிளிநொச்சி கோணாவில் பகுதியில், பண்னையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்றைய தினம் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
கிளிநொச்சி கோணாவில் பகுதியில், மேச்சல் இல்லாமையினால் பல கால்நடைகள் உயிரிழந்து வருவதாக, அங்கஜன் ராமநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த பிரச்சினைக்கு இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக, கால்நடை ராஜாங்க அமைச்சர் தனக்கு தெரிவித்துள்ளதாக, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் ராமநாதன் சுட்டிக்காட்டினார்.