மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹட்டனில் மேலும் ஒரு பகுதி முடக்கம்!

- Advertisement -

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வட்டவளை Mount Jean தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

- Advertisement -

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 59 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த Mount Jean தோட்டத்தை சேர்ந்த பலருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், Mount Jean தோட்டத்தை சேர்ந்தவர்களுக்கு PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நம்புவதாக, வெளியுறவு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு துணை நிற்பதுடன்,...

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம்..!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலாவதாக இரணைதீவு பகுதியில் இதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் ஓட்டமாவடி மற்றும்...

க.பொ.த உயர்தர – சாதாரண தரீப்பட்சைகள் நடாத்தும் அட்டவணையில் மாற்றம் – இலங்கை ஆசிரியர் சங்கம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தரீப்பட்சைகளை நடத்தும் அட்டவணையில், மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, அரசாங்கம் எந்தவொரு தரப்புடனும் இதுவரை கலந்துரையாடவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. அத்துடன், இவ்வாறான...

மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க உடன் இணைந்து பணியாற்ற தாம் தயார்: ஐ.ம.ச கருத்து!

மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் மாத்திரமே இணைந்து செயற்பட உள்ளதாக...

இரத்தினக்கல் அகழ்வு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, லக்கல பிரதேச செயலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்,  குறித்த நடவடிக்கையானது...

Developed by: SEOGlitz