கடந்த தசாப்தத்தின் கண்ணியமான கிரிக்கெட் விளையாட்டுக்கான விருது, இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்த Ian Bell ஐ மீண்டும் துடுப்பெடுத்தாட அனுமதித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதே நிகழ்வுக்காக 2011 ஆம் ஆண்டின் ICC வருடாந்த விருது வழங்கல் நிகழ்விலும், கண்ணியமான கிரிக்கெட் விளையாட்டுக்கான விருது, இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்டது.