நாட்டில் தற்போது சுமார் 20 அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு மாத்திரம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா, தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் மேலும் 126 படுக்கைகள் தயார் நிலையில்காணப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் 70 சிகிச்சை நிலையங்களில் 11 ஆயிரத்து 575 படுக்கைகள் காணப்படுவதுடன், அவற்றில் 8 ஆயிரத்து 188 படுக்கைகள் கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.