மெய்ப்பொருள் காண்பது அறிவு

போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளைப் பெறுவதற்கு புதிய நடைமுறைகள் அறிமுகம்!

- Advertisement -

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்களின் ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்த அலுவலகங்களின் ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நாள் மற்றும் நேரத்தை முன்னதாகவே ஒதுக்கிக் கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், இதன்மூலம் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, 0112 677 877 எனும் 24 மணி நேர அழைப்பு இலக்கத்தின் மூலம் நாள் மற்றும் நேரத்தை முன்னதாகவே ஒதுக்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று முதல் குறித்த இலக்கத்தின் ஊடாக சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சீன அரசாங்கத்தினால் அடுத்த மாதம் இலங்கைக்கு வழங்கவுள்ள கொரோனா தடுப்பூசிகள்!

இலங்கைக்கு சீன அரசாங்கம் மூன்று இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசியினை வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் அவை இலங்கைக்கு  நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை...

SAMSUNG GALAXY S21 SERIES : அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு!

SAMSUNG GALAXY S21 SERIES: அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு. தற்போது முற்பதிவு செய்து கொள்ள முடியும் WEDNESDAY, 27TH JANUARY 2021, COLOMBO: இலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட்...

மாலியில் இடம்பெற்ற பிரான்ஸ் படைகளுடனான தாக்குதலில் 100 பேர் பலி..!

மாலியில் இடம்பெற்ற பிரான்ஸ் படைகளுடனான தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 100 பேர் உயிரிழந்துள்ளனர். சாஹேல் பாலைவனம் அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக மாலி ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2012 ஆம் ஆண்டில் இருந்து வடக்கு...

தீர்வு இல்லாவிட்டால் சேவையில் இருந்து விலகுவோம்: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்!

அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்  எதிர்வரும் 9 ஆம் திகதி முதல்  சேவையில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக   தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்கள்..!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் வீரர்கள் இருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட முயன்றதாக குறித்த வீரர்கள் மீது...

Developed by: SEOGlitz