மெய்ப்பொருள் காண்பது அறிவு

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 8 பிரதேசத்தை சேர்ந்த 87 வயதான ஆண் ஒருவர், பம்பலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் மற்றும் பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானோருடன் நெருங்கிப் பழகியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய நாளில் மாத்திரம் 559 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 491 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டோரில், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இருவர், துருக்கி, மாலைதீவு மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த தலா ஒவ்வொருவர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கடல்சார் உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 369 பேர் குணமடைந்த நிலையில் நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 816 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 113 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 650 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 7 இலட்சத்து 77 ஆயிரத்து 610 PCR பரிசோலனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர் எதிர்வரும் சில வாரங்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஆங்கில வார இறுதி  நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்துவரும் சில நாட்களில்...

நாடாளுமன்ற பணியாளர்களில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடாளுமன்ற பணியாளர்களில் மேலும் ஐவருக்கும், பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையின் அடிப்படையிலேயே, அவர்களுக்கு தொற்று உறுதி...

வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்...

தெற்கு அதிவேக பாதையில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெற்கு அதிவேக பாதையில் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் இன்று கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக பாதையில் பயணித்த பஸ் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  ரெப்பிட் என்டிஜன் பரிசோதனையில் பயணி ஒருவருக்கு...

நாட்டின் வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை : திஸ்ஸ அத்தநாயக்க!

தேசிய வருமானத்தினை ஈட்டித்தரும் நாட்டின் பெறுமதியான வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz