கிளிநொச்சியைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 71 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலே குறித்த ஐவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கிளிநொச்சி தொண்டமான் நகரத்தில் தண்ணீர் விற்பனை நிலையத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும், குறித்த விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள விறபனை நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கும், முன்னதாக தொற்றுக்குள்ளானவரின் மருமகனுக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.