மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிபதியாக நியமிக்கப்படுபவர் யார்?

- Advertisement -

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதற்காக, 14 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த நீதிபதிகளின் பெயர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நாடாளுமன்ற பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இதற்கமைய, அவர்களில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் 10 பேரும், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தனியார் பிரிவிலிருந்து இரண்டு நீதிபதிகள் வீதமும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேனகா விஜேசுந்தர, டி.என் சமரகோன், எம். பிராசாந்த டி சில்வா, எம்.ரி.எம் லபீர், சி. பிரதீப் கீர்த்திசிங்க, சம்பத் பி அபேகோன், எம்.எஸ்.கே.பி விஜேரத்ன, ஆர். குருசிங்க, ஜி.ஏ.டி  கணேபொல, கே.கே.ஏ.வி சுவர்ணாடிபத்தி, எம். குரே, பிரபாகரன் குமாரரத்னம், டபிள்யூ. எம்.என்.பி இத்தவல மற்றும் சம்பத் மெண்டிஸ் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பணிபுரியும் சில நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, குறித்த வெற்றிடங்களுக்கு, 14 நீதிபதிகளின் பெயர்கள் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இது குறித்து ஆராய்வதற்காக, நாடாளுமன்றப் பேரவை நாளை பிற்பகல் ஒன்று கூடவுள்ளது.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பதவிக்காக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பெயரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்மொழிந்துள்ளார்.

இந்த நிலையில், இது குறித்தும் நாளைய தினம் பரிசீலிக்கப்பட்டு, நாடாளுமன்றப் பேரவையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz