மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஊழல் – கோப் குழு தெரிவிப்பு!

- Advertisement -

மத்திய அதிவேக நெடுஞ்சாலைகள் கட்டுமானப் பணிகளின் போது இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் கோப் குழு வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆரய்வதற்காக மாத்திரம் 1 தசம் 7 பில்லியனுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேலும், கடவத்தையில் இருந்து மீரிகம வரையிலான வீதி நிர்மாணப் பணிகளை  2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தாமதப்படுத்தியதன் காரணமாக 8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், 2012 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்வதற்காக 284 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் கோப் குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அறிக்கைகள் சிலவற்றினால் தற்போதுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கு எந்தவிதமான பயனும் இல்லை என கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் நிபுணர்களின் ஆலோசனைகள் இன்று அப்போதைய அமைச்சரவையின் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோப் குழு தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz