மெய்ப்பொருள் காண்பது அறிவு

45 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 45 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

நாட்டில், தடுப்பூசிகளை சேமிப்பதற்கும், அதனை பயன்படுத்துவது குறித்த நியமங்களை ஏற்ப்பட்டுத்துவதற்கும் போதிய வசதிகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஒரே நேரத்தில் அதிகளவான தடுப்பூசிகள் கொண்டுவரப்படும் போது, அதனை சேமிப்பது, மற்றும் அதற்கான வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவது மற்றும் அதனை விநியோகிப்பது குறித்த திட்டங்களை முன்மொழியுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு தேவையான வசதிகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளதாகவும் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மீள ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பன நாளை முதல் (07) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இது...

சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

Decathlon கொழும்பின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

விளையாட்டு பொருட்களின் சில்லறை விற்பனையாளராக வாடிக்கையாளர் மத்தியில் நட்பெயர் பெற்ற DECATHLON நிறுவனமானது தமது மற்றுமொரு புதிய கிளையை கொழும்பில் ஸ்தாபித்துள்ளது. யுனியன் பிஸஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள DECATHLON நிறுவனத்தின் இரண்டாவது கிளையானது உடற்பயிற்ச்சி...

ரிஸாட் பதியுதீன் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்த S.M.M. முஷர்ரப்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் தொடர்பில் எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M.M. முஷர்ரப் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் – சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தற்போதையநிலையில் பயங்கரவதா தடுப்பு...

Developed by: SEOGlitz