மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 167 பேர் இன்று நாட்டிற்கு வருகை!

- Advertisement -

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 167 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் நகரில் இருந்து 57 இலங்கையர்கள் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL -226 விமான சேவை ஊடாக இன்று அதிகாலை 3.30 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

- Advertisement -

அத்துடன், கட்டாரின் டோஹா நகரில் இருந்து 42 பேர் கட்டார் எயார்வைஸுக்குச் சொந்தமான QR – 668 எனும் விமானம் ஊடாக இன்று அதிகாலை 1.45 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேலும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் நகரிலிருந்து இருந்து 68 இலங்கையர்கள்  எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK  – 648  விமானம் ஊடாக நேற்று இரவு 11.30 அளவில் நாடுதிரும்பியுள்ளனர்.

இவ்வாறு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்களுக்கு விமான நிலையத்திலே PCR  பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த 167 பேரும்  தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

மின்சாரத் துறையின் மாற்றங்கள் தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து!

மின்சாரத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் அழைப்பு விடுப்பதாக, மின்சக்தித் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையில் மாத்திரம் 65 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். அத்துடன் Leco நிறுவனத்தில் மாத்திரம்...

மின் கட்டணங்கள் குறைக்கப்படுமா? துமிந்த திஸாநாயக்க விளக்கம்…

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய, மின் கட்டணங்களை குறைக்கும் வகையில், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி,...

நீர் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அனுர குமார திஸாநாயக்க கருத்து!

இலங்கையில், நீர் மின் உற்பத்தி நடவடிக்கைகள் ஓரளவு அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால், மின்சக்தி மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகிய இரண்டு நிறுவனங்களினதும் செலவீனங்கள் குறைவடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க...

Developed by: SEOGlitz