மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வரை தாம் போராடுவதாக சஜித் தெரிவிப்பு!

- Advertisement -

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை, மக்களுக்கு இலவசமாக வழங்கும் வரை தாம் போராடுவதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நேற்றைய விவாதத்தில், உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

தற்போதைக்கு வெற்றி கண்டுள்ள கொரோனாத் தடுப்பூசியை விநியோகிக்குமாறு, வேறு நாடுகள் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும், இலங்கை இதுவரை அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா போன்ற நாடுகளில், அவ்வாறான தடுப்பூசிகள் அதிகம் காணப்படுவதாகவும், அவற்றை இலங்கைக்கும் பெற்றுக் கொள்ள, உடன்படிக்கைகள் எட்டப்பட வேண்டும் எனவும், சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தற்போது டொலர் சம்பாதிக்கும் விடயமாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை தவிர, முகக் கவசங்கள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், விமான டிக்கட்டுக்கள் மற்றும் பரிசோதனை இயந்திரங்களின் ஊடாக, பலர் இலாபங்களை பெற்று வருவதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வழங்கப்பட்ட நிவாரணப் பணங்களை,  மக்கள் ஒரு வார காலத்துக்குள் செலவளித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, ஒரு வார காலத்துக்குள் செலவு செய்வதற்காக. ஐயாயிரம் ரூபா நிவாரணப் பணம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு, அத்தியவசிய உணவுப் பொருட்கள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கருத்துக்கு பதிலளித்த போதே, அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார்.

இதேவேளை, அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மோதரை, இக்பாவத்தை பகுதி மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபா நிவாரணம் தமது குடும்பத்தின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை எனவும், தாம் பட்டிணி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

லங்கா பிரீமியர் லீக் : Galle Gladiators துடுப்பாடத் தீர்மானம்!

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச...

அஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை யாழில் கைது!

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக கூறப்பட்டு அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக வைத்து இன்று மாலை 5.50 மணியளவில் யாழ்ப்பாணம்...

மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :

கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...

களுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz