மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கனவாக காணப்பட்ட பல விடயங்களை நிறைவு செய்த அரசாங்கம்: கெஹெலிய கருத்து!

- Advertisement -

நாட்டில் கனவாக காணப்பட்ட பல விடயங்களை நிறைவேற்றிய அனுபவம் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

நாட்டின் சவால்களை ஏற்றுக்கொள்ள கூடிய, அதனை ஏற்று கொண்டு நடத்திய அனுபவத்தை கொண்டு எங்களால் நாட்டை முன்கொண்டு செல்லகூடிய நம்பிக்கை உள்ளது. நாட்டில் யுத்தம் ஒன்று இருக்கும் போது, பல அழிவுகள் ஏற்பட்ட போது ஆசியாவின் பொருளாதார ரிதியில் முதலிடத்துக்கு நாட்டை கொண்டுவர முடிந்தது. பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது கனவென்று ஹக்கிம் கூறினார். நான் ஒன்றை கூற விரும்புகின்றேன். கனவை நனவாக்கிய தரப்புக்கே மக்கள் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர். திட்டமிட்ட செயற்பாடுகளின் ஊடாக கைவிட்டு போன அத்துனை வளங்களையும் மிண்டும் பெற்றுக்கொள்ள முடியுமாக அமைந்தது. சுற்றுலாதுறையில் வீழ்ச்சி உள்ளது.  வெளிநாட்டு வேலைவாய்பு நடவடிக்கைகளில் விழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. இதனை யாரும் எதிர்ப்பார்க்க வில்லை. இருந்தும் இந்த விடயங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. ஆகவே புதிய சிந்தனைகளின் அடிப்படையில் நாட்டை கட்டியெழுப்பிய அனுபவம் உள்ளவர்கள் நாங்கள். ஆகவே எங்களுக்கு தொடர்ந்தும் நாட்டிடை கட்டியெழுப்ப முடியும்.

இதேவேளை, கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை
அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு வடக்கு, மத்திய கொழும்பு ஆகிய பகுதி மக்கள் தொடர்ந்தும் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டு இருக்கின்றனர். முடக்கநிலை காரணமாக குறித்த மக்களின் வாழ்வாதாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது. உண்ண உணவி நீர் என்பன இன்றி அல்ல் படுகின்றனர். கிராமிய மக்களை விட நகர ஏழை மக்கள் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனர். ஒரு துளி நீரைகூட பணமின்றி பெற்றுக்கொள்ள முடியாது. ஒருமாத காலமாக இவ்வாறு தடைப்பட்டு வாழ்க்கின்றனர்.5 ஆயிரம் ரூபா அவர்களுக்கு போதுமானது இல்லை. நாளொன்றுக்கு உழைக்கும் பணத்தை கொண்டு அந்த மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். ஆகவே இந்த மக்களுக்காக உதவிகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

Decathlon கொழும்பின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

விளையாட்டு பொருட்களின் சில்லறை விற்பனையாளராக வாடிக்கையாளர் மத்தியில் நட்பெயர் பெற்ற DECATHLON நிறுவனமானது தமது மற்றுமொரு புதிய கிளையை கொழும்பில் ஸ்தாபித்துள்ளது. யுனியன் பிஸஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள DECATHLON நிறுவனத்தின் இரண்டாவது கிளையானது உடற்பயிற்ச்சி...

ரிஸாட் பதியுதீன் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்த S.M.M. முஷர்ரப்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் தொடர்பில் எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M.M. முஷர்ரப் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் – சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தற்போதையநிலையில் பயங்கரவதா தடுப்பு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவின் விசேட கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண்பதோடு, உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித பாரபட்சமும் இன்றி...

Developed by: SEOGlitz