மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீன் உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிப்பு!

- Advertisement -

வில்பத்து காடழிப்பு தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு குறித்து   உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மெகஸின் சிறைச்சாலையில் இருந்து  ஸ்கைப் தொழினுட்பம் ஊடாக முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் இதனை  கூறியுள்ளார்.

- Advertisement -

இதேவேளை வில்பத்து காடழிப்பு தொடர்பான வழக்கு விசாரணையை முன்னெடுத்திருந்த நீதிபதிகள்  குழுவினர்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை வில்பத்து கல்லாறு பகுதியில் காடழிப்பு மேற்கொள்ளப்பட்டமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 16 ஆம் திகதி  தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனக் டி சில்வா மற்றும் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைனக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,  இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவதற்காக சட்டவிரோதமாக வில்பத்து காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தினால் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மன்னார் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்

இந்த நிலையிலேயே, குறித்த காடழிப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது சொந்த செலவில், மீண்டும் காடு வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு காடழிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பங்களை வழங்கியமைக்காக, வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக நீதிமன்றத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மனுதாரர்களின் வழக்குக் கட்டணத்தை அரசாங்கத்திற்கும் ரிஷாட் பதியுதீனுக்கும் செலுத்துமாறு மேன்முறையிட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz