மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் முன்னேடுப்பதற்கு நீதிமன்றம் தடை!

- Advertisement -

வவுனியா மாவட்டத்தில் மாவீரர் தினம் மற்றும் ஆர்ப்பாட்டம் முன்னேடுப்பத்றகு  நீதிமன்ற தடை விதிக்கப்பட்ட  பகுதிகளில் பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்

மாவீரர்  வாரம் இன்று   ஆரம்பமாகியுள்ள நிலையில் பொலிசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -

மாவீரர் தினத்தை  முன்னிட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் நடை பயணம் மேற்கொள்வதற்கு கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை வரை வவுனியா நீதிமன்றால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு  குறித்த மாவட்ட நீதிமன்றங்கள் கடந்த 19 ஆம் திகதி  தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனடிப்படையில், எதிர் வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை  மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தின  நினைவேந்தலை நடாத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 23ஆம் திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் மாவீரர் நாள் நினைவேந்தல் நினைவுகளை தடைசெய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு  மீதான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

Developed by: SEOGlitz