மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

தனிமைப்படுத்தல் உத்தரவு  காரணமாக தமது வாழ்வாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக    தெரிவித்து  கொழும்பு நகரில் தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு நகரின் மோதரை, இக்பாவத்தை பகுதி மக்கள் அளுத்மாவத்தை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் தனிமைப்படுத்தல் உத்தரவு காரணமாக  பொருளாதார ரீதியில் தாங்கள்   பெரிதும் பாதிக்கபபட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு தமக்கு போதிமானதாக இல்லை எனவும் குறித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அரசாங்கம்   தமக்கு நிவாரணம் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்   மேலும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz