மெய்ப்பொருள் காண்பது அறிவு

களப்பு பகுதியில் முன்னெடுத்து வரும் கட்டிட நிர்மாண பணிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

- Advertisement -

சாம்பல் தீவு களப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டிட நிர்மாண பணிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சாம்பல்தீவு களப்பு பகுதியினை முழுமையாக வன பாதுகாப்பிற்கான வர்த்தமானிக்குள் உள்வாங்கி, குறித்த களப்பு பகுதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த பகுதியில் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கான அனுமதி பத்திரங்கள் தொடர்பில் ஆராயப்படுவதுடன், இந்த விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான விதத்தில் செயற்பட்டிருப்பார்களானால்   அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு இருப்பின் அவை அரசுடமையாக்கப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz