மெய்ப்பொருள் காண்பது அறிவு

PCR பரிசோதனையின்றி தமது நாட்டுக்குள் உள்நுழைய பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி!

- Advertisement -

PCR பரிசோதனையின்றி தமது நாட்டுக்குள் உள்நுழைய, பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இவ்வாறு PCR பரிசோதனைகள் இன்றி தமது நாட்டுக்குள் உள்நுழைய முடியும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

- Advertisement -

இதேவேளை, PCR பரிசோதனைகள் இன்றி தமது நாட்டுக்குள் உள்நுழைய, மேலும் 20 நாடுகளுக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, அவுஸ்திரேலியா, சீனா, மாலைதீவு, சவூதி அரேபியா, ஜப்பான் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 20 நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளத.

இதேவேளை, டென்மார்க் நாட்டிலிருந்து வருகை தரும் பயணிகள், இரண்டு PCR பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதலாவது பரிசோதனை பாகிஸ்தானுக்கு உள்நுழைவதற்கு முன்னரான 96 மணித்தியால காலப்பகுதியிலும், இரண்டாவது பரிசோதனை பாகிஸ்தானுக்கு உள்நுழைந்த பின்னரும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவுக்கு பயணிக்கும் இலங்கைப் பயணிகள். இன்று முதல் தனிமைப்படுத்தப்பட மாட்டர்கள் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று!

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை இம்முறை நடத்தும் வாய்ப்பை இலங்கை...

Developed by: SEOGlitz