மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிங்கப்பூருக்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கான எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தல்!

- Advertisement -

சிங்கப்பூருக்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கான எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஃபிஜி, பின்லாந்து, தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் துருக்கி ஆகிய 6 நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.

- Advertisement -

இதன் அடிப்படையில் சிங்கப்பூருக்கு பயணிக்கும் குறித்து நாடுகளின் பிரஜைகள் தனிமைப் படுத்தல் நிலையங்களை தவிர்த்து தமது வீடுகளிலேயே 14 நாள் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சுகாதார அமைச்சு இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் சிங்கப்பூருக்கு பயணிப்பதற்கு 14 நாட்கள் முன்னதாக வேறு நாடுகளுக்கோ அல்லது பிராந்தியங்களுக்கோ பயணிக்காதவர்களுக்கே இந்த சலுகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்குறிப்பிட்ட ஆறு நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா, புரூனேய் தாருஸ்ஸலாம், ஹொங்கொங், மெக்காவோ, சீனா, நியூஸிலாந்து, தாய்வான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இந்த பட்டியலில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவலின் நிலைமைகளை தொடர்ச்சியாக அவதானித்து தமது எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறைவேற்றுப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தினது பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் லீ சிங் மேயின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்எம் இன் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்த, ஆதரவாக இருக்கின்ற...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : முகாமைத்துவப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுமதி வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். எமது...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறுவனத் தலைவரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத் தலைவர் சதாசிவம் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைப் பெருமையுடன் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். நாம்...

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 32 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிசெயற்பட்ட மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர  காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா...

கெப்பிட்டல் எப்.எம் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடும் நிலையில், அந்நிறுவனத்தின் பணிப்பாளர் விதுர்ஷன் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் பெருமை...

Developed by: SEOGlitz