மெய்ப்பொருள் காண்பது அறிவு

தப்பிசென்ற கொரோனா நோயாளியை அடையாளங்காண பொதுமக்களிடம் உதவிக் கோரல்!

- Advertisement -

கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற பெண்ணைத் தேடும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி குறித்த பெண் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 0112433333 அல்லது 119 மற்றும் 011 24 21111 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி விபரங்களை அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் அவரது இரண்டரை வயது மகனுடன் நேற்று முன்தினம் இரவு தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் அவர் எஹெலியகொடை பகுதிக்கு சென்று அங்கு தனது மகனை ஒப்படைத்த பின்னர் கிரியெல்ல பிரதேசத்துக்கு சென்றுள்ளதாக அறியக்கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் கண்டறியப்பட்ட அவரது மகன் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைவாக உரிய தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணைத் தேடும் பணியில் எஹெலியகொடை மற்றும் கிரியெல்ல பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

Developed by: SEOGlitz