மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்தோர் நாட்டை வந்தடைந்தனர்

- Advertisement -

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 411 பேர் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, தொழில் நிமித்தம்  கட்டார் நாட்டிற்கு  சென்றிருந்த 290 இலங்கையர்கள் டோஹாவில் இருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான U.L 218  விமானம் ஊடாக இன்று காலை 6.45 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

- Advertisement -

மேலும், ஔக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த 21 இலங்கையர்கள் அபுதாபியில் இருந்து எட்ஹாட் விமான சேவைக்குச் சொந்தமான EY -264 விமானம் ஊடாக இன்று அதிகாலை 12.45 அளவில் நாடுதிரும்பியுள்ளனர்.

அத்துடன், கட்டாரில் இருந்து 42 பேர் கட்டார் எயார்வைஸுக்குச் சொந்தமான QR – 668 எனும் விமானம் ஊடாக இன்று அதிகாலை 1.45 அளவில் நாட்டை வந்தடைந்தனர்.

அதேபோன்று, இந்தியாவின் சென்னை நகரில் இருந்து 58 பேர் ஶ்ரீலங்கன் எயார்வைஸுக்குச் சொந்தமான UL – 1026 எனும் விமானம் ஊடக இன்று காலை 4.45 அளவில் நாடுதிரும்பியுள்ளனர்.

இவ்வாறு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, 267 இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து  மத்தியகிழக்கு, இந்தியா மற்றும் இங்கிலாந்து  ஆகிய நாடுகளுக்கு  பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

Developed by: SEOGlitz