மெய்ப்பொருள் காண்பது அறிவு

Q-SHOP திட்டம் பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது…

- Advertisement -

இளம் தொழில்முனைவோருக்காக ஆயிரம் Q-SHOP திட்டம்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதற்கான நிகழ்வு இலங்கை அரச வர்த்தக  கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

- Advertisement -

இதன்போது,  முதலாவது கியூ-ஷொப் விற்பனை நிலையம்  பிரதமரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உயர் தரத்திலான பொதுத்துறை மற்றும் உள்ளூர் தனியார் உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை, நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதன் ஊடாக, இளம் தொழில்முனைவோருக்கு சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆயிரம் கியூ-ஷொப்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனையடுத்து,  2024ஆம் ஆண்டளவில்,  நாட்டின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் 14 ஆயிரம் கியூ-ஷொப்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு குறைந்த விலையில் உயர் தரத்திலான தயாரிப்புகளை விநியோகித்தல் மற்றும் போட்டி மிகுந்த இளம் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் ஆகியனவே இதன் பிரதான நோக்கமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சின் இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த திட்டத்திற்கு இளம் தொழில்முனைவோர் அடையாளங் காணப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Q-SHOP திட்டம் பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது... 1

Q-SHOP திட்டம் பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது... 2 Q-SHOP திட்டம் பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது... 3 Q-SHOP திட்டம் பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது... 4

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

மின்சாரத் துறையின் மாற்றங்கள் தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து!

மின்சாரத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் அழைப்பு விடுப்பதாக, மின்சக்தித் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையில் மாத்திரம் 65 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். அத்துடன் Leco நிறுவனத்தில் மாத்திரம்...

மின் கட்டணங்கள் குறைக்கப்படுமா? துமிந்த திஸாநாயக்க விளக்கம்…

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய, மின் கட்டணங்களை குறைக்கும் வகையில், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி,...

Developed by: SEOGlitz