மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

- Advertisement -

சகல நிறுவனங்களும் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை முகாமையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி குறித்த இடங்களில் கை கழுவுவதற்கான இடம், உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் வசதி மற்றும் சமூக இடைவெளி ஆகிய சுகாதார நடைமுறைகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளவாறு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz