மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 148 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு வருகை!

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 148 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கைப் பிரஜைகளை, நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்துக்கு அமையவே, அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதற்கமைய,  ஐக்கிய அரபு இராஜ்ஜியம், கட்டார், ஜப்பான் மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் இருந்தே, அவர்கள் வருகை தந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் நகரிலிருந்து,  நேற்றிரவு 11.30 அளவில் நாட்டை வந்தடைந்த விமானத்தில் 83 பேர் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த ஒருவர், இன்று அதிகாலை 1.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மேலும், ஒஸ்ட்ரியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 52 பேரும், இன்று அதிகாலை 3.25 அளவில்  நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜப்பானிலிருந்து, இன்று அதிகாலை 3.37 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமான நிலையத்தில், 12 இலங்கையர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், இலங்கை இராணுவத்தினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக, எமது விமான நிலைய செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய நாளில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு  தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி தொற்றுக்குள்ளான 147 பேர் நேற்றைய நாளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்...

வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  பிரதிப்பொலிஸ்  மா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன...

மஹர சிறைச்சாலை தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட  மோதலில் சேதமடைந்துள்ள  பொருட் சேதங்கள் குறித்து இன்று மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பாரிய பொருட் சேதம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறைச்சாலையில்...

Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி…!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது போட்டியில் Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில்,  Kandy Tuskers மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் பலப்பரீட்சை...

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அக்கரைப்பற்று பகுதியில் 24 பேரும் திருக்கோவில் பகுதியில் மூவரும்  தமன...

Developed by: SEOGlitz