மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!

- Advertisement -

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்க வேண்டாம் எனக் கோரி, யாழ் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பமாகியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளைக் காரணமாக வைத்து, எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய வேண்டாம் எனக் கோரி, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, மனுவின் பிரதிவாதிகளாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, குறித்த மனுக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி, மனுதாரர்கள் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், வி மணிவண்ணன் மற்றும் கே.சயந்தன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

இதேவேளை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அம் மாவட்ட நீதிமன்றங்கள் தடையுத்தரவு பிறப்பித்துள்ளன.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ல்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 14 பேருக்கும், மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மன்னார் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை யாழில் கைது!

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக கூறப்பட்டு அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக வைத்து இன்று மாலை 5.50 மணியளவில் யாழ்ப்பாணம்...

மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :

கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...

களுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மகிந்தவுடன் விசேட சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பிரதமரின் விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

Developed by: SEOGlitz