மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றசாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 46 பேர் கைது!

- Advertisement -

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில், ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் கமெராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, இந்த நடவடிக்கையூடாக இதுவரை 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz