மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படவுள்ள சியபத என்னும் வீடமைப்பு திட்டம்!

- Advertisement -

சியபத என்னும் வீடமைப்பு திட்டம் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த இதனை கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த வீடமைப்பு திட்டம் ஏற்கெனவே கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கம்பஹா மாவட்டத்தில் 5 மாடிகளையும் 100 வீடுகளையும் கொண்டதாக இந்த சியபத வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சியபத வீடமைப்பு திட்டம் நாட்டின் 160 தேர்தல் தொகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் 16 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த கூறியுள்ளார்.

அடுத்த வருட இறுதிக்குள் குறித்த அனைத்து வீடுகளையும் கட்டி முடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  பிரதிப்பொலிஸ்  மா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன...

மஹர சிறைச்சாலை தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட  மோதலில் சேதமடைந்துள்ள  பொருட் சேதங்கள் குறித்து இன்று மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பாரிய பொருட் சேதம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறைச்சாலையில்...

Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி…!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது போட்டியில் Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில்,  Kandy Tuskers மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் பலப்பரீட்சை...

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அக்கரைப்பற்று பகுதியில் 24 பேரும் திருக்கோவில் பகுதியில் மூவரும்  தமன...

அமெரிக்காவில் மேலும் தீவிரமடையும் கொரோனா..!

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 892 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக அமெரிக்காவில் நாளாந்தம் ஒரு இலட்சத்து 50...

Developed by: SEOGlitz