மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்றாவது நாளாகவும் – இன்று வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதம்!

- Advertisement -

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் வரவு செலவு திட்டம் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாட்டின் 75ஆவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் கடந்த 17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, அரசாங்கத்தினால் 2021 ஆம் ஆண்டுக்கான வருமானமாக ஆயிரத்து தொள்ளாயிரத்து 61 பில்லியன் ரூபா நிதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனமாக 3 ஆயிரத்து 525 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் ஆயிரத்து 564 பில்லியன் ரூபா துண்டுவிழும் தொகையாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதன்படி,  காலை 9.30 முதல் பிற்பகல் 5.30 வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

Developed by: SEOGlitz