மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று முதல் விசேட அம்பியூலன்ஸ் சேவை வழங்க நடவடிக்கை!

- Advertisement -

கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இன்று முதல் விசேட அம்பியூலன்ஸ் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே,இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த பகுதிகளில் உள்ள எவரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால், இந்த அம்பியூலன்ஸ் சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 0113 422 558 எனும் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அம்பியூலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அம்பியூலன்ஸ் சேவையை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கெப்பிட்டல் எப்.எம் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடும் நிலையில், அந்நிறுவனத்தின் பணிப்பாளர் விதுர்ஷன் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் பெருமை...

மஹர சிறைச்சாலைக் கைதிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று!

மஹர சிறைச்சாலைக் கைதிகள் 12 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளுள் இதுவரை 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய நாளில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு  தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி தொற்றுக்குள்ளான 147 பேர் நேற்றைய நாளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்...

வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  பிரதிப்பொலிஸ்  மா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன...

மஹர சிறைச்சாலை தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட  மோதலில் சேதமடைந்துள்ள  பொருட் சேதங்கள் குறித்து இன்று மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பாரிய பொருட் சேதம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz