மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோப் குழு இன்று மீண்டும் கூடவுள்ளதாக அறிவிப்பு!

- Advertisement -

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இன்று மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் இதனை தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக கோப் குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இன்று முதல் மீண்டும் கூடவுள்ளதாக அதன் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள கோப் குழுவின் கூட்டத்துக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்ட முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், சம்பந்தப்பட்ட திட்டப் பிரிவின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 7 அதிகாரிகளுக்கு மாத்திரம் இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான சாத்தியக்கூற்று ஆய்வு மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் கோப் குழுவில் ஆராயப்படவுள்ளதாக அதன் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

LPL கிரிக்கெட் திருவிழா – Jaffna Stallions அணி அபார வெற்றி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

கொரோனா உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதை மை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மேலும் 221 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனாவுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்...

நோர்வூட் பிரதேசத்தில் தீப்பரவல் : 12 குடியிருப்புகள் பாதிப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவ்வெளி தொழிற்சாலைப் பிரிவில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் 12 குடியிருப்புகள் எரிந்து போயுள்ளன. இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 இற்கு  இடம்பெற்றதாக எமது பிராந்திய...

Developed by: SEOGlitz